Shanipairchi Special Puja in Thirunallar: Lord Saturn Shifts From Makara Rasi to Kumbha Rasi

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை: மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயரும் சனிபகவான்

Shanipairchi Special Puja

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா (Shanipairchi Special Puja) காரைக்கால் அருகே வுள்ள திருநள்ளாறில் இருக்கும் சனீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெறுகிறது. இன்று டிசம்பர் 20 சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு சார்வரி வருடம் டிசம்பர் 27ஆம் தேதி சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் இரவு முழுவதும் நடைதிறந்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகரம் ராசிக்கு வாக்கியப் பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைந்தார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 5.20 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

Shanipairchi Special Puja in Thirunallar Shanipairchi Special Puja

கொடியேற்று விழா Shanipairchi Special Puja

சனிப்பெயர்ச்சி கொடியேற்று விழா கடந்த நவம்பர் 23ஆம் தேதி திருநள்ளாறில் நடைபெற்றது. இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்து வருகின்றனர். டிசம்பர் 20 இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை விடிய விடிய இரவு முழுவதும் கோயில் நடை சாத்தப்படாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்குக் குடிநீர், கழிவறை, அன்னதானம், இலவச பேருந்து உள்ளிட்ட ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தரிசனம் வசதிகள்

  • இலவச தரிசனம் மற்றும் விஐபி தரிசன வரிசைகளுக்கும் ஏற்பாடுகள் செய்துள்ளனர் .
  • நளன் குளம் வாயிலிருந்து இலவச தரிசனத்துக்கான வரிசை தொடங்குகிறது.
  • யானை மண்டபம் வழியாக விஐபி தரிசனம்,
  • ராஜகோபுரம் வழியாக 1000 ரூபாய் டிக்கெட் பெற்றவர்களும்,
  • தெற்கு வீதி வழியாக 600 ரூபாய் டிக்கெட் பெற்றவர்களும்,
  • மேற்கு வீதி மற்றும் நளன் குளம் எதிர்வாயில் வழியாக 300 ரூபாய் டிக்கெட் பெற்றவர்களும் செல்லலாம் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பக்தர்கள் நளன் குளத்தில் குளிக்கவும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

Top 10 Famous Temple in Tamil Nadu 

View the Top 10 Famous Temple in Tamil Nadu through the Above link.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *