Solar and Lunar Eclipses in 2024…

Table of Contents

 2024ல் நிகழ உள்ள சூரிய, சந்திர கிரகணம் பற்றிய விரிவான தகவல்கள் இங்கே…

Solar and Lunar Eclipses

2024 ஆண்டின் முதல் சந்திர கிரகணம் (Solar and Lunar Eclipses) பங்குனி உத்திரம் நாளான மார்ச் 25 ஆம் தேதி நிகழ உள்ள அதே நாளில் தான் ஹோலி பண்டிகையும் கொண்டாடப் படவுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பின் ஹோலி பண்டிகை தினத்தன்று நிகழும் சந்திர கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Lunar Eclipses

சந்திர கிரகணம் என்றால் என்ன?
What is a lunar eclipse? (Solar and Lunar Eclipses)

  • சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது.
  • சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது “சந்திர கிரகணம்” ஏற்படுகிறது.

2024 ஆம் ஆண்டிற்க்கான சந்திர கிரகணம் எப்போது? When is the Lunar Eclipse of 2024?

  • மார்ச் 25,2024ஆம் தேதியன்று பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
  • 100 ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனி உத்திரம், ஹோலி கொண்டாடப்படும் நாளில் சந்திர கிரகணம் நிகழப்போகிறது.
  • சந்திர கிரகணம் இந்திய நேரப்படி காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 03:02 வரை நீடிக்கும்.
  • கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 36 நிமிடங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சந்திர கிரகணம் (Penumbral) பெனும்பிரல் சந்திர கிரகணமாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

பெனும்பிரல் சந்திர கிரகணம் என்றால் என்ன? What is a Penumbral Lunar Eclipse?

  • பெனும்பிரல் சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் பூமியின் நிழலின் வெளிப்புற விளிம்புகள் வழியாக மட்டுமே செல்லும். அப்போது சந்திரனின் ஒளி லேசாக மட்டுமே குறையும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பார்க்க முடியுமா? Can you watch it in India?

  • 2024 ஆம் ஆண்டிற்கான சந்திர கிரகணத்தை இந்தியாவில் காணமுடியாது. இந்திய நேரப்படி பகலில் சந்திர கிரகணம் நிகழ்வதால் அதை நாம் பார்க்க முடியாது.
  • அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் இந்த சந்திர கிரணத்தை காண முடியும்.

இந்த ஆண்டில் எத்தனை முறை கிரகணம் நிகழும்? How many eclipses occur this year?

  • 2024 ஆம் ஆண்டில் ஆண்டில் நான்கு கிரகணங்கள் ஏற்பட்ட உள்ளன.
  • ஏப்ரல் 8ஆம் தேதி, சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
  • இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழும் சூரிய கிரகணம் என்பதால் இங்கு தெரியாது.
  • மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்ட்டிக், பகுதிகளில் சூரிய கிரகணம் தெரியும்.
  • செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி புதன்கிழமை பகல் 07.45 மணிக்கு கிரகணம் சந்திர கிரகணம் நிகழப்போகிறது.
  • மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்ட்டிக், பகுதிகளில் சந்திர கிரகணம் தெரியும்.
  • அக்டோபர் 2,2024 சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
  • இந்தியாவில் தெரியாது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்ட்டிக், பகுதிகளில் சூரிய கிரகணம் தெரியும்.
  • 2 சந்திர கிரகணம், 2 சூரிய கிரகணங்கள் நிகழ்ந்தாலும் எதுவுமே இந்தியாவில் தெரியாது.

சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது? How does a solar eclipse occur?

சூரியன் – பூமிக்கு இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால், சூரியனின் ஒளி மறைக்கப்படும் நிகழ்வு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

சூரிய கிரகணம் 2024 எப்பொழுது? When is solar eclipse 2024?

சந்திர கிரகணம் 2024 மார்ச் 25ம் தேதி, திங்கட் கிழமை பெளர்ணமி அன்று நிகழ உள்ளது. எப்போதும் கிரகணம் என்றால் அடுத்தடுத்து இருமுறை ஏற்படும். எப்போதும் ஒரு சந்திர கிரகணம் ஏற்படக்கூடிய பௌர்ணமியை, தொடர்ந்து அடுத்த 15வது நாள் வரும் அமாவாசை தினத்தில் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது. அந்த வகையில் மார்ச் 25ல் தேதி சந்திர கிரகணம் முடிந்து அடுத்த 15 நாளில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் ஏப்ரல் 8ம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.

சூரிய கிரகணம் எத்தனை மணிக்கு? What time is the solar eclipse?

ஏப்ரல் 8ம் தேதி வரக்கூடிய சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்குகிறது. இந்த கிரகணத்தின் உச்சம் இரவு 11.47 மணிக்கு நிகழ்கிறது. கிரகணம் நள்ளிரவு 2.22 மணிக்கு முடிவடைகிறது.

கிரகணத்தின் போது நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?   What are the things we should do during the Solar and Lunar Eclipses?

  • சந்திர கிரகணத்தின் போது நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • சந்திர கிரகண நேரத்தில், கடவுள் வழிபாடு செய்வதை தவிர்த்தாலும், நாம் தொடர்ச்சியாக மந்திரங்களையும், கடவுள் பெயரை முட்டி இருக்கலாம். புராணங்களைப் படிக்கலாம்.
  • மந்திரங்கள் தெரியவிட்டாலும் எளிமையான, ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா போன்ற எளிமையான மந்திரங்களை நாம் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம்.
  • சந்திர கிரகணம் முடிந்தவுடன், வெள்ளை நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அசுப பலன்கள் குறையும்.

சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது?  What not to do during Solar and Lunar Eclipses?

  • சந்திர கிரகணம் ஏற்படும்போது ஒரு சில விஷயங்களில் நாம் சிறப்பாக உடன் செலுத்த வேண்டும்.
  • சந்திர ஏற்படும் போது எல்லாம் அதன் சூதகாலம் அதற்கு 9 மணி நேரத்திற்கு முன் தொடங்கும். சூத காலத்தில் நாம் எந்த ஒரு சுப காரியங்களையும் செய்யக்கூடாது.
  • சந்திர கிரகணத்தின் போது உணவு சமைப்பதையும், சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
  • கிரகண காலத்தில் தெய்வ சிலை தொடக்கூடாது. கோயிலுக்குள் நுழையக்கூடாது.
  • கிரகண நேரத்தின் போது கத்தி, ஊசி போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
  • குறிப்பாக சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லக்கூடாது.

Solar and Lunar Eclipses

இந்திய நேரப்படி பகலில் சந்திர கிரகணம் நிகழ்வதால் அதை நாம் பார்க்க முடியாது. இந்தியாவில் தோஷ காலம் பொருந்தாது என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது. பங்குனி உத்திர தினம் என்பதால் முருகன், சிவ ஆலயங்களில் வழக்கம் போல திருவிழாக்கள் நடைபெறும். சந்திர கிரகணத்தின் தொடர்ச்சியாக அடுத்த 15 நாட்களில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *