South Indian Coconut Festival Will be Held on January 28 Under the Auspices of Isha Man Kappom Movement

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் தென்னிந்திய தென்னை திருவிழா ஜனவரி 28 ல் நடைபெறவுள்ளது

South Indian Coconut Festival

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் “தென்னிந்திய தென்னை திருவிழா” (South Indian Coconut Festival) என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. வருகின்ற ஜனவரி 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

South Indian Coconut Festival

மண் காப்போம் இயக்கம்

ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்ததில் அவர், தென்னை விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாததால், தென்னைக்குள் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளை காட்டிலும் தென்னையை மட்டுமே பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவே உள்ளது.

தென்னைக்குள் ஜாதிக்காய், பாக்கு, மிளகு. டிம்பர் மர வகைகள், இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக வளர்ப்பதன் மூலம் முன்னோடி விவசாயிகள் பலரின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ள இந்த லாபகரமான சூழல் அனைத்து விவசாயிகளுக்கும் சாத்தியம். அவர்களும் தென்னைக்குள் ஊடுபயிர் செய்வதன் மூலம் வருவாயை பெருக்க முடியும் என்பதை உணர்த்த இந்த தென்னிந்திய தென்னை திருவிழா நிகழ்சியை ஒருங்கிணைத்து உள்ளோம்.

Coconut Festival

  • 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.
  • தென்னிந்திய அளவில் நடப்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வல்லுனர்கள் மற்றும் முன்னாடி விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
  • நிகழ்ச்சியில் தென்னை விவசாயத்திற்கு தேவையான எளிமையான கருவிகளை காட்சி மற்றும் விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது.
  • 60 இயற்கை அங்காடிகள் இடம்பெற உள்ளன.
  • இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பு விவசாயிகள் 83000 93777, 94425 90077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  • இதில் பயிற்சி பெற விவசாயிகளுக்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *