Southern Railway Announcement of Special Train Between Chennai – Nagercoil

சென்னை – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் தெற்கு ரயில்வே அறிவிப்பு

Southern Railway

கோடை கால விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே (Southern Railway ) தெரிவித்துள்ளது.

Southern Railway

21-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06019) மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.  சென்னை சென்டிரலில் இருந்து வரும் 22 ஆகிய தேதிகளில் மதியம் 3.10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06020) மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நாகர்கோவிலில் இருந்து வரும் 14, 28 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06021) மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். சென்னை சென்டிரலில் இருந்து வரும் 15, 29 ஆகிய தேதிகளில்  மதியம் 3.10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06022) மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *