Special Buses Run in Tamil Nadu on the Occasion of Thaipusa Festival

தைப்பூச விழாவை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Special Buses

தைப்பூச விழாவை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் (Special Buses) தைபூசம் – பழநி, பௌர்ணமி – திருவண்ணாமலை கிரிவலம், குடியரசு தின விழா மற்றும் வார விடுமுறை நாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால், பயணிகள் தேவைக்கு ஏற்ப 25.012024 (வியாழக் கிழமை) முதல் 28.01.2024 (ஞாயிற்றுக்கிழமை) வரை பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Special Buses

சிறப்பு பேருந்துகள் (Special Buses)

தைப்பூசம், மற்றும் பௌர்ணமி முன்னிட்டு பழநி மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு 24.012024 முதல் 28.012024 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

  • விடுமுறை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பேருந்துகள் உட்பட நாளொன்றுக்கு சுமார் 300 பேருந்துகள் சென்னையிலிருந்து – கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர். பெரம்பலூர்,ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும்.
  • திருச்சியிலிருந்து – தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும்.
  • மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும்.  கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.
  • அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் தேவைக்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் முடிந்து பயணிகள் அவரவர் ஊர்களுக்கு செல்ல 28.01.2024, 29.01.2024 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1.00 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயகொண்டம் அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12.00 மணி வரையிலும்
  • புதுக்கோட்டை, நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12.00 மணி வரையிலும்,
  • காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10.00 மணி வரையிலும் இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் இயக்க
    ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *