Tamil Nadu Chief Minister Stalin Inaugurates First 20-Foot Statue of Thiruvalluvar in Tamil Characters in Coimbatore

முதல் முறை 20 அடியில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை: கோவையில் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இந்தக் குளங்களின் கரைகளை மேம்படுத்தி, பொதுமக்கள் பொழுது போக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 20 அடியில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை (Statue of Thiruvalluvar) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Statue-of-Thiruvalluvar

Statue of Thiruvalluvar

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் குறிச்சி பகுதியில் 2 பிரிவாக 340 ஏக்கர் பரப்பளவில் குறிச்சி குளம் அமைந்துள்ளது. தமிழர் மரபை பிரதிபலிக்கும் வகையில் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன. குறிச்சி குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் திறந்தவெளி அரங்கம் போல ‘செல்ஃபி பாயின்ட்’ ஏற்படுத்தப்பட்டு, அங்கு 15 அடி உயரத்தில் நாட்டியம் ஆடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள், சிலம்பம் ஆடும் வீரர்கள் என 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

Statue-Thiruvalluvar

கோவை குறிச்சி குளத்தில் தமிழ் எழுத்துக்களை கொண்டு சுமார் 2.5 டன் எடையில் 20 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை, மழையையும், வெயிலையும் தாங்கும் வகையில், துருப்பிடிக்காத வகையில் ஸ்டீலால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய் எழுத்து, ஆயுத எழுத்து ஆகிய 247 தமிழ் எழுத்துக்களை கொண்டு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துக்களால் சிலை வைப்பது நாட்டிலேயே இது தான் முதல் முறை. இதில் சில சொற்கள் மறைத்து பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் இச்சிலையை உற்று நோக்கும் போது, அந்த 4 சொற்களும் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *