Tamil Nadu Chief Minister Stalin Laid the Foundation Stone for IT Tidal Park in Trichy Panjapur

திருச்சி பஞ்சப்பூரில் ஐடி டைடல் பார்க் – தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்  நாட்டினார்

IT Tidal Park

தமிழ்நாட்டில் 10 நகரங்களில் IT பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்த நிலையில் இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் (IT Tidal Park) அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த டைடல் பூங்கா விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

IT-Tidal-Park

10 ஐடி பூங்காக்கள்

தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பத் துறையானது தாமதமின்றி செயல்படுத்தப்படும், என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தஞ்சை IT Tidal Park

தஞ்சையில் 92.50 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தஞ்சாவூரில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன தற்போது நிலையில் போர்வெல் பணிகள் முடிந்து தரைத்தளம் முடிந்து 1 தளம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பிளான்படி பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி ஐடி பூங்கா

திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த டைடல் பூங்கா விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். விரைவில் இதற்கான கட்டுமானம் தொடங்கப்பட உள்ளது.

  • ஐடி மற்றும் ஐடி அலுவலகம் கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர்
    நிலத்தை இறுதி செய்துள்ளது.
  • இந்த நிலையில்தான் முந்தைய ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, பெரிய அலுவலக இடத்துக்கு புதிதாக தற்போது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், டைடல் பூங்காவிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
  • திருச்சியில் இத்திட்டத்திற்காக 2023-24 பட்ஜெட்டில் மாநில தொழில் துறையும் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • பல இட ஆய்வுகளுக்குப் பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பஞ்சப்பூர் வருவாய் கிராமத்தில் மாநகராட்சியின் 8.9 ஏக்கர் நிலம் திட்டத்திற்கு சாத்தியமானது என்று தெரிவித்தது.
  • தற்போது 14.1 ஏக்கராக மாற்றப்பட்டு, கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *