Tamil Nadu Class 4th to 8th Exam Schedule Change – School Education Department

தமிழகத்தில் 4 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வு அட்டவணை மாற்றம் – பள்ளிக் கல்வித் துறை

Exam Schedule Change

தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏப்.10 மற்றும் ஏப்.12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்.4 மற்றும் ஏப்.6-ம் தேதிகளுக்கு மாற்றப்பவடுவதாக (Exam Schedule Change) பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

Exam Schedule Change

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.10 மற்றும் ஏப்.12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்.4 மற்றும் ஏப்.6-ம் தேதிகளுக்கு மாற்றப்பவடுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப். 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்து, புதிய தேர்வுக் கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருந்தது.

2023-24 கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப் பட்டுள்ளது. ஏப்.10 மற்றும் ஏப்.12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்.4 மற்றும் ஏப்.6-ம் தேதிகளுக்கு மாற்றப்பவடுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *