Tamil Nadu: Release of Final Voter list Ahead of Lok Sabha Elections!

தமிழகம்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Tamil Nadu Voter list

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் (Tamil Nadu Voter list) அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில்,  இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜனவரி 22) வெளியிடப்பட  உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

Tamil-Nadu-Voter-list

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி நிகழாண்டிற்கான வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலை மக்கள் பார்வை இடவும்,  திருத்தங்கள் செய்யவும், புதிதாக பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 9ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் மழை, வெள்ளம் புயல் உட்பட பல்வேறு காரணங்களால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி ஜனவரி 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல்  திங்கட்கிழமை – ஜனவரி 22 (இன்று) வெளியிடப்படுகிறது. தமிழகம் முழுமைக்குமான ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, சென்னையில் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிடுகிறார்.  இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலை ஆட்சியர்கள் வெளியிட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *