The Labor Welfare Department has Called for Talks With the Trade Unions on Dec. 27 Regarding the Transport Strike

போக்குவரத்து வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிற் சங்கங்களுடன் டிச.27-ல் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை அழைப்பு

The Labor Welfare Department

போக்குவரத்துக் கழக வேலை நிறுத்த அறிவிப்பு தொடர்பாக டிச.27-ல் தொழிற் சங்கங்களுடன் தொழிலாளர் நலத்துறை (The Labor Welfare Department)  பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.  போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் மேலாண் இயக்குநர்களுக்கு தொழிலாளர் தனி இணை ஆணையர் அனுப்பிய கடிதத்தில் போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக வரும் 27-ம் தேதி மாலை 4 மணியளவில் தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்பு பேச்சு வார்த்தை நடக்கிறது.

Bus-transport The Labor Welfare Department

தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும், வேலைநிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். பொது அமைதி காத்து சுமுக முடிவை எதிர்நோக்குமாறு இருதரப்பினருக்கும் அறிவுறுத்தப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 99 மாதங்களாக வழங்கப் படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்கவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *