Thirunelveli: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code

Thirunelveli: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code

திருநெல்வேலி

திருநெல்வேலி (Thirunelveli) மாநகரம், தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலை நகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர்காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ எனச் சம்பந்தரும், “தண் பொருநைப் புனல்நாடு’ எனச் சேக்கிழாரும், “பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி’ என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இவ்வூர் அல்வாவிற்கு பெயர் பெற்றது.

tourist-places-near-tirunelveli

வரலாறு (Thirunelveli)

14ஆவது நூற்றாண்டுகளில் நெல்லையப்பர் கோவில் பாண்டியர்களின் அரசக் கோவிலாக விளங்கியது. அரச ஆதரவினால் அக்காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டன. குலசேகரப் பாண்டியனின் மரணத்திற்குப் பிறகு, 16ஆவது நூற்றாண்டில் விசயநகர மன்னர்களும் (பாளையக்காரர்கள்) ஆட்சி புரிந்தனர். தெலுங்கு, கன்னடர்கள் கிழக்கத்திய கரிசல் மண் பிரதேசத்திலும் குடியேறினர். திருநெல்வேலி மதுரை நாயக்கர்களின் இரண்டாம் தலைநகரமாக இருந்தது. விசுவநாத நாயக்கர் காலத்தில் 1560இல் திருநெல்வேலி மீளமைக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் உள்ள கற்றளிகளில் இவரது தாராளமான நன்கொடை பதியப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டின் மையக்காலத்தில் இப்பகுதியை சந்தா சாகிப் ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம் கைப்பற்றினர்.1801இல் நவாபிடமிருந்து திருநெல்வேலியைப் பெற்ற பிறகு பிரித்தானியர் இதனைத் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரமாக்கினர். நிர்வாக, படைத்துறை தலைமையகங்கள் பாளையம்கோட்டையில் அமைந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு திருநெல்வேலி மாவட்டத் தலைநகரமாக விளங்கியது. 1986இல் தனியாக தூத்துக்குடி மாவட்டம் பிரிந்தது. தற்போதைய இந்திய அரசின் 100 நுண்சீர் நகரங்களில் ஒன்றாக திருநெல்வேலி அடையாளம் காணப்பட்டுள்ளது.

Thirunelveli-junction.

மக்கள்தொகை விவரம்

மக்கள்தொகை (மொ) ஆண்கள் பெண்கள்
33,22,644 16,42,403 16,80,241

பெயர்க்காரணம் (Thirunelveli)

  • 16 ஆம் நூற்றாண்டு நூல் வேணுவனப் புராணம் திருநெல்வேலிக்கு ‘வேணுவனம்‘ என்று பெயர் சூட்டிப்படுகிறது.
  • வேணு‘ என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். பண்டைக் காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இந்த ஊர், மூங்கில்-நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால், இந்த ஊரை ‘நெல்வேலி‘ எனப் பெயரிட்டு வழங்கியிருக்கிறார்கள்.
  • அந்தணர் ஒருவர் நெல்லையப்பர் சுவாமிக்கு சமைத்து படைப்பதற்காக நெல்லை வெய்யிலில் காய வைத்து விட்டு சென்றிருக்க மழை பொழிய ஆரம்பித்து விட்டது. ப
  • யந்தோடி வேகமாக வந்தவர் வியந்து போனார். இறைவன் அருளால் நெல்லைச் சுற்றி மழை பொழியாமல் வேலியிட்டார் போல காணப்பட்டது.
  • இவ்வாறு இறைவன் நெல்லுக்கு வேலியிட்டதால் திரு என்னும் அடைமொழியுடன் திருநெல்வேலி ஆனது.

tourist-places-Thirunelveli

சுற்றுலாத்தலங்கள் (Thirunelveli)

அகஸ்தியா் அருவி

அகஸ்தியர் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சி திருநெல்வேலியிலிருந்து 42கி.மீ தொலைவில் பாபநாசம் பகுதியில் அமைந்துள்ளது அகத்திய முனிவரின் முன் சிவன் மற்றும் பார்வதி தோன்றிய இடத்தில் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. பாபநாசம் என்பதன் பொருள் பாவங்களை நிவர்த்தி செய்வது என்பதாகும். இந்த அருவியில் இருந்து விழும் நீரில் மக்கள் குளித்தால் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடும் ஒரு முக்கிய யாத்ரீக மையமாக இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

Agastya Falls Thirunelveli
மணிமுத்தாறு அணை

குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி அருவிக்கு கீழே 80அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம். பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்ணை, மீன் பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம்.

Manimuthar Dam Thirunelveli

அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில், திருநெல்வேலி

வேணுவனமாக இருந்த பகுதியின் வழியாக அந்நகரை ஆண்டு வந்த மன்னனுக்கு இறைவன் இடப வாகனத்தில் தோன்றி என்னைச் சோதிமயமாகக் கண்டதால் நீ முழுதுங்ககண்ட இராமன் என்று பெயர் பெற்று விளங்குவாய் என அருளித்தனக்குத் திருத்தளி அமைக்க ஆணையிட்ட ருளினான். திருமூல நாதருக்கும் வேயின் முளைத்த இலிங்கத்திற்கும் மற்றுமுள்ள மூர்த்திகளுக்கும் ஆலயம் அமைத்து ஆகம விதிப்படி விழாக்களும் அமைத்தான். இத்திரு விளையாடல் பங்குனித்திங்கள் செங்கோல் திருவிழாவின் 4ம் நாள் அன்று நடைபெற்று வருகின்றது.

Arulmiku Nellaiyapar Arultharum Gandhimati Amman Temple, Thirunelveli

விமான நிலையம் (Thirunelveli)

  •  தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ.
  • மதுரை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 170 கி.மீ

இரயில் நிலையம் (Thirunelveli)

  • திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம்

திருநெல்வேலி தபால் நிலையம் எண்

  •  திருநெல்வேலி-627001

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பட்டியல்

மேலும் தமிழக மாவட்டங்கள் பற்றி அறிய மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *