Thoothukudi : Athipattu Thermal Power Station to be Opened in the New Year

தூத்துக்குடி : புத்தாண்டில் திறக்கப்படும் அத்திப்பட்டு அனல்மின் நிலையம்

Thoothukudi : Athipattu Thermal Power Station

தமிழ்நாட்டில் எண்ணூர், நெய்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு பகுதியில் தற்போது புதிதாக அனல்மின் நிலையம் (Thoothukudi : Athipattu Thermal Power) கட்டப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

Athipattu-Thermal-Power-Station

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் புதிய அனல்மின் நிலையம் ரூ.6,500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனல்மின் நிலையத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன் கட்டுமான பணிகள் தற்போது முடிந்து அனல் மின் நிலையம் செயல்பட தயாராக உள்ளது.

  • தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனல்மின் நிலையங்களை விட இது மிகப் பெரியது. இதன் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து 2019-ம் ஆண்டிலேயே மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டோம்.
  • ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாகவும் இந்த அனல்மின் நிலைய கட்டுமானப் பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக  மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.
  • அத்திப்பட்டு அனல்மின் நிலையத்துக்கு ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி பெறப்பட உள்ளது.
  • அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
  • கொதிகலன் நீர் அழுத்த சோதனை, துணை கொதிகலன் எரியூட்டும் சோதனை, கொதிகலன் நீர் வெளியேற்ற முடியாத பகுதியில் நீர் அழுத்த சோதனை ஆகிய முக்கிய பணிகள் முடிக்கப்பட்டு தற்போது கட்டுமானப் பணி முடிந்து செயல்பாட்டுக்கு வர தயாராக உள்ளது.
  • எண்ணூர், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்கள் வழியாக கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட உள்ளது.
  • தெலங்கானா மாநிலம் சிங்கனேரி சுரங்கத்தில் இருந்து பெறப்படும் நிலக்கரி, ரயில் மூலம் எடுத்து வரப்படும்.
  • இந்த அனல் மின் நிலையம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டு மின் உற்பத்தி உடனடியாக தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *