Tirunelveli: Notification of Exam Date Postponed due to Migjam storm

திருநெல்வேலி: மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி அறிவிப்பு

Tirunelveli

மிக்ஜாம்  புயல் காரணமாக ஏற்பட்ட அதிகன மழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டத்திற்கு அரையாண்டு தேர்வு தேதிகள் டிசம்பர் 30 இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exam-date Tirunelveli

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 7-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே கடந்த 17,18ஆம் தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்து பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் அரையாண்டு தேர்வை முழுமையாக எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். திருநெல்வேலியில் ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

எனினும் மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்தபடி டிசம்பர் 22 ஆம் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *