TN Electricity Board Notification: Reduction in Supervision Fees from 22% to 5%!!

தமிழக மின்வாரிய அறிவிப்பு:  22 %  இருந்து  5% மாக மேற்பார்வை கட்டணம் குறைப்பு!!

TN Electricity Board

தமிழ்நாடு மின்வாரியத்தில்  (TN Electricity Board ) பொதுமக்கள் தங்கள் நிலம் அல்லது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள மின்கம்பம், மின்கம்பி, மின்பாதை, மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்யக் கோரி விண்ணப்பிக்கும் போது, மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 22 % நிர்வாகம் மற்றும் மேற்பார்வைக் கட்டணமாக பொதுமக்கள் செலுத்த வேண்டி இருந்தது.

TN Electricity Board

பொதுமக்களுக்கு பெரிய சுமையாக இருந்து வந்த இத்தொகையை குறைக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்தக் கட்டணத்தை மின்வாரியம் குறைத்துள்ளது.

  • மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: பொதுமக்கள் தங்கள் நிலம் அல்லது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள மின்கம்பம், மின்கம்பி, மின்பாதை, மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு மின்வாரியத்தில் விண்ணப்பிக்கும் போது, மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 22 சதவீதம் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணமாக செலுத்த வேண்டி இருந்தது.
  • 22 சதவீத நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணத்தை 5 சதவீதமாக குறைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகுவாகக் குறையும்.
  • பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகுவாக குறைவதால் பொதுமக்கள் மிகவும் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *