TN Health Department: Medical services should not be affected by election work!

தமிழக சுகாதாரத்துறை: தேர்தல் பணிகளால் மருத்துவ சேவை பாதிக்கப்படக் கூடாது!

TN Health Department

தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக  நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் தேர்தல் பணிகளில், மருத்துவ சேவையில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்டசுகாதார அலுவலர்களுக்கு “தமிழக சுகாதாரத்துறை” (TN Health Department) அறிவுறுத்தி யுள்ளது.

TN Health Department

மக்களவைத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளதால், அரசியல் கட்சியினர் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் அத்தியாவசிய மருத்துவ சேவை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

கோடைகால வெயிலின் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் அந்நேரங்களில் மக்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு குறித்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி தொடர்ந்து மருத்துவ சேவை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *