TN Power Board has Launched a New Mobile Application for Approval of Electricity Service

மின் சேவை ஒப்புதல் பெற புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்த தமிழக மின்வாரியம்

Electricity Service

தமிழக மின்வாரியம் புதிய மின் இணைப்புக்கு ஒப்புதல் அளிப்பது, மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட இணைப்புகளை கண்டறிவது உள்ளிட்ட மொபைல் செயலி சோதனை திட்டம் வெற்றி பெற்றுள்ளதால், மாநிலம் முழுவதும் அமல்படுத்த மின்வாரியம் (Electricity Service) முடிவு செய்துள்ளது.

Electricity Service

தமிழக மின்வாரியம் வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவுமின் இணைப்புகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க களப் பிரிவு ஊழியர்களுக்கு மொபைல் செயலியை அறிமுகம் செய்து ஊழியர்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து தரப்பட்டுள்ளது.

மின் மீட்டரில் பதிவாகியுள்ள மின்பயன்பாடு கணக்கு, கட்டண விபரம், நுகர்வோருக்கு உடனே அனுப்பப்படுகிறது. மொபைல் செயலியில் கூடுதல் சேவையாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட மற்றும் மீண்டும் வழங்கப்பட்ட இணைப்புகளை உடனுக்குடன் கண்டறிவது, புதிய மின்இணைப்புக்கு ஒப்புதல் வழங்குவது, குறைபாடு உடைய மீட்டருக்குப் பதில் புதிதாக மீட்டர் மாற்ற ஒப்புதல் தருவது உள்ளிட்ட கூடுதல் சேவைகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மொபைல் செயலி சோதனை

மொபைல் செயலி சோதனை அடிப்படையில் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 12 மண்டல அலுவலகங்களில் தலா ஒரு பிரிவு அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் செயல்படுத்தப்பட்டது. இச்சோதனை வெற்றி பெற்றுள்ளதால், மாநிலம் முழுவதும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *