Traffic Changes in Chennai Ahead of Prime Minister Modi’s Visit to Participate in the Gallo India Youth Games

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Traffic Changes in Chennai

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்.  விளையாட்டு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னையில் பிரதமர் மோடி வருகையை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றங்கள் (Traffic Changes in Chennai) செய்யப் பட்டுள்ளது.

Traffic Changes in Chennai

Traffic Changes in Chennai

சென்னையில் பிரதமர் வருகையின் போது விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள்விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றியுள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அண்ணாசாலை, SV பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும், வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனுமதிக்கப்படா சாலைகள்

  • அண்ணா Arch முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
  • பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா Arch-ல் திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும்.
  • வட சென்னையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் என்.ஆர்.டி புதிய பாலத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப் மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.
  • ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹன்டர்ஸ் ரோடு ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டு, நாயர் பாயிண்ட்(டாக்டர் அழகப்பா சாலை X ஈவிஆர் சாலை சந்திப்பு) வழியாக சென்றடையலாம்.
  • வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *