Transport Pensioners: Request for Speedy Hearing of Case on Concession

போக்குவரத்து ஓய்வூதியர்கள்: அகவிலைப்படி வழக்கை விரைந்து விசாரிக்க கோரிக்கை

Transport Pensioners

தமிழக அரசின் அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, பதிவாளர் உள்ளிட்டோருக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கடிதம் ( Transport Pensioners) அனுப்பி வருகின்றனர்.

Transport Pensioners

தமிழக போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு ரூ.10 ஆயிரத்துக்குக் குறைவாகவே ஓய்வூதியம் வழங்கப்படுவதுடன் அகவிலைப்படி உயர்வையும் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அரசு நிறுத்திவிட்டது. அகவிலைப்படி உயர்வு  தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்திய போதும் அரசு கண்டு கொள்ளவில்லை.

ஓய்வூதியர் நலச் சங்கங்கள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அகவிலைப்படி உயர்வை 2022 நவ.25-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என நீதிபதி சத்ய நாராயண பிரசாத் உத்தரவிட்ட நிலையில் அரசு மேல்முறையீடு செய்து 7 மாதங்களுக்கு மேலாக விசாரணைக்கு வராமல் காலம் தாழ்த்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து ஓய்வூதியர்கள் மன உளைச்சலுடன் வாழ்ந்து வருகிறோம். எனவே, ஓய்வூதியர்கள் நலன் கருதி வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, பதிவாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வருகிறோம். இதுவரை சென்னையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கடிதங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஏப்.15-ம் தேதிக்குள்ளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பி உள்ளோம். ஓய்வூதியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியே கடிதம் அனுப்பி வருகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *