Trichy City Under Security Cordon Ahead of PM Modi’s Srirangam Temple Darshan – Police Announcement

பிரதமர் மோடியின் ஸ்ரீரங்கம் கோயில் தரிசனம் முன்னிட்டு பாதுகாப்பு வளையத்தில் உள்ள திருச்சி மாநகரம் – காவல்துறை அறிவிப்பு

Trichy City Under Security

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தரிசனம் முன்னிட்டு ஜனவரி 20-ம் தேதி பிரதமர் மோடி வருகை தர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோயிலை சுற்றியுள்ள வீடுகளில் வசிப்போர் விவரங்களை போலீஸார் சேகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு வளையத்தில் உள்ள திருச்சி மாநகரம் (Trichy City Under Security).

Modi visit Srirangam

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி

  • சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி இன்று    (ஜனவரி 19) தொடங்கி வைக்கிறார்.
  • பின்னர் அவர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.
  • மறு நாள், ஜனவரி 20-ம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் செல்கிறார்.
  • அங்கிருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார்.
  • ஹெலிகாப்டர் மூலம் முற்பகல் 11 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோயிலுக்கு செல்லும் பிரதமர்,
  • பிற்பகல் 12.40 மணி வரை கோயிலில் உள்ள பல்வேறு சந்நிதிகளுக்கும் சென்று தரிசனம் செய்கிறார்.
  • திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேசுவரம் புறப்படும் பிரதமர் மோடி, பிற்பகல் 2.10 மணிக்கு ராமநாதசாமி கோயிலை அடைகிறார்.
  • பிற்பகல் 2.45 முதல் 3.30 மணி வரை அங்கு தரிசனம் செய்யும் அவர், இரவு ராமேசுவரத்தில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
  • மறு நாள் ஜன.21-ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் சென்று விமானம் மூலம் அயோத்தி செல்கிறார்.
  • அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேசுவரம் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் Trichy City Under Security

பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, விமான நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் என்.காமினி தலைமையில், பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை ( SPG) IG லவ்குமார் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கோயில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஸ்ரீரங்கம் கோயில் அருகில் வசிப்பவர்களின் விவரங்கள் குறித்து, போலீஸார் வீடு தோறும் சென்று விவரங்களை சேகரித்து வருகின்றனர். பிரதமர் வருகையை யொட்டி, ஸ்ரீரங்கம் முழுவதும் போலீஸாரின் தீவிர பாதுகாப்பு வளையத்தில் வந்துள்ளது. பிரதமர் வருகையையொட்டி, பாதுகாப்புக் கருதி திருச்சியில் ஜனவரி-17 முதல் 20-ம் தேதி வரை ட்ரோன் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *