Trichy District is Historic, Temples, tourist Places, Bus Stand, Airport, Railway Station

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

(Trichy District is History)

இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான திருச்சிராப்பள்ளி  மாநகராட்சியாகும். இது உள்ளாட்சி அமைப்பின்படி ஒரு மாநகராட்சி ஆகும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி இதுவே ஆகும். இந்த மாநகராட்சி 167.23 ச.கி.மீட்டர் கொண்ட பரந்து விரிந்த தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாநகராட்சி ஆகும். இது முதன்முதலில் நகராட்சியாக நிறுவப்பட்டது 08.07.1866. பின் மாநகராட்சியாக 01.06.1994 அன்று தரம் உயர்த்தப்பட்டது.Trichy District is History

Uchipillaiyar Trichy

Trichy District is History

இந்த மாநகராட்சியை ஒட்டியுள்ள துவாக்குடி, திருவெறும்பூர் நகராட்சிகளை திருச்சியுடன் இணைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனடிப்படையில் இந்த மாநகராட்சி நான்கு மிகப்பெரிய மண்டலங்களையும் நூறு (100) வார்டுகளையும் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சி சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளைப் போலவே பல நகராட்சிகளைக் கொண்டுள்ளது.

Srirangam Temple

அதனடிப்படையில் அரியமங்கலம்,அபிஷேகபுரம்,பொன்மலை, திருவரங்கம், துவாக்குடி, ஆகிய நகராட்சிகளையும் திருவெறும்பூர் பேரூராட்சிகளையும் உள்ளடக்கி உள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெருநகர மாநகராட்சியாக இல்லாத போதிலும் ஆண்டு வரி வருவாய் 615 கோடி ரூபாய் ஈட்டுகிறது. இது தமிழக மாநகராட்சிகளின் வரி வருவாயில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி சிறப்புக்கள்

  • மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வேறு எந்த மாவட்டத்துக்கும் இல்லாத சிறப்பு.
  • தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும் சுமார் நான்கு மணி முதல் ஐந்து மணி நேர பயணத்தில் திருச்சியை வந்தடைய முடியும்.
  • திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு வருடம் முழுவதும் சுவை மிகுந்த காவிரி நீர் தடையின்றி கிடைக்கிறது.
  • சென்னை அடுத்து அதிகமாக சர்வதேச விமானங்கள் இங்கு தான் தரையிறக்கப் படுகின்றன.
  • டெல்டா மாவட்டங்களின் தலைநகரமாகப் போற்றப்படுகிறது.
  • இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மாநகரம், விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் என அனைத்து பெருமைகளையும் திருச்சியே கொண்டுள்ளது.
  • உலகின் மிகப் பழமையான பாறை மலையாக திருச்சி மலைக்கோட்டை இவ்வூரின் அடையாளமாக இருக்கின்றது.
  • இந்தியாவின் மிகப் பெரிய திருக்கோவில்களில் ஒன்றான திருவரங்கம் வைணவம் தலம் திருச்சி மாநகராட்சியில் அமைந்துள்ளது.

திருச்சி மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகள் பகுதிகள்

மாநகராட்சிப் பகுதிகள் பேரூராட்சிகள்
திருவரங்கம் பனையக்குறிச்சி
பொன்மலை உக்கடை அரியமங்கலம்
கோ அபிசேகபுரம் பாண்டமங்கலம்
அரியமங்கலம் திருவளர் சோலை
திருவெறும்பூர் உய்யகொண்டான் திருமலை
கே.சாத்தனூர் (வடக்கு, தெற்கு) – ஸ்ரீரங்கம் பொன்மலை தொடர்வண்டித்
மேலக்கல்கண்டார்கோட்டை, ஆலத்தூர், பாண்டமங்கலம் தொழிற்கூடக் குடியிருப்பு

வண்ணத்துப்பூச்சி பூங்கா

Butterfly Park in Trichy

Address: வெப்பமண்டல பட்டர்ஃபிளை கன்சர்வேட்டரி வளாகம் ஸ்ரீரங்கம் தாலுகா r s d, மேலூர், தமிழ்நாடு 620006

Phone: 04312904921

Hours: 9 am -5 pm

காணத்தக்க இடங்கள்

  • திருவரங்கம், (ஸ்ரீரங்கம்)
  • ஜம்புகேஸ்வர் திருக்கோவில், திருவானைக்காவல்
  • மாரியம்மன் கோவில், சமயபுரம்
  • புனித மரியன்னை பேராலயம் , மேலப்புதூர்
  • நாதிர்ஷா தர்கா
  • பச்சமலை
  • புளியஞ்சோலை
  • முக்கொம்பு
  • வண்ணத்துப்பூச்சி பூங்கா, மேலூர் (ஸ்ரீரங்கம்)
  • கோளரங்கம்
  • அரசு அருங்காட்சியகம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியைப் பற்றியத் தகவல்கள்
பரப்பளவு
167 ச.கிமீ
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி 10,22,518
மண்டலங்கள்
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
மாநகராட்சி மொத்த வார்டுகள்
100

பேருந்து நிலையங்கள்

இந்த மாநகரம் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து மிக மிக ஏராளம். அது சாலை மார்க்கமாக இருந்தாலும், வான்வழி மார்க்கமாக இருந்தாலும், இரயில் போக்குவரத்தாக இருந்தாலும் சரி. இந்த மாநகரம் மூன்று பேருந்து நிலையங்களை கொண்டுள்ளது. அவை

  • சத்திரம் பேருந்து நிலையம்,
  • மத்திய பேருந்து நிலையம்,
  • ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பஞ்சப்பூர் என மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன.

Chatram Bus Station

இவ்விரு பேருந்து நிலையமும் தென்னிந்தியாவிலேயே பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றாகும். இதில் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். தமிழ்நாட்டிலேயே மூன்றாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்; மற்றும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமாக, கட்டி முடிக்க உள்ளார்கள்.

இரயில் சேவை

  • 1853-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியை தலையிடமாகக் கொண்டு, தென்னக இரயில்வே உருவாக்கப்பட்டது. 1859-ஆம் ஆண்டில், தென்னகத்தின் முதல் இருப்புப் பாதையான திருச்சிராப்பள்ளி – நாகப்பட்டினம் அமைக்கப்பட்டது.
  • தற்போது, தென்னிந்தியாவின் முக்கிய தொடர்வண்டி சந்திப்பாகவும், தென்னக இரயில்வேயின் தனிப் பெரும் மண்டலமாகவும் உருப்பெற்றுள்ளது.

Rail way station

விமான நிலையம்

இந்தியாவில் உள்ள பழமையான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமானது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. மேலும் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் பதினொன்றாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு  (About chennai) அடுத்து அதிக அளவில் சர்வதேச விமானங்கள் இங்குதான் தரையிறக்கப்படுகின்றன.

(Trichy District is Historic Temples tourist Places Butterfly Park) தமிழக மாவட்டங்கள் பற்றிய தகவல்களை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

List of Districts in Tamil Nadu, India

Trichy District is Historic, Temples, tourist Places, Butterfly Park, Bus Stand, Airport, Railway Station

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *