Trichy Metro Routes Notification!!

திருச்சி மெட்ரோ வழித்தடங்கள் அறிவிப்பு!!

Trichy Metro Routes

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் தொடங்கி வரும் நிலையில் தற்போது திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ரோ தொடங்கப்பட உள்ள மெட்ரோவில் மேப் (Trichy Metro Routes) வெளியாகி உள்ளது.

Trichy Metro Routes

சேலம், திருநெல்வேலியில் மெட்ரோ லைட் தொடங்கப்பட உள்ள நிலையில் தான் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான மு.அ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் சென்னை, நந்தனதில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் சமர்பித்தார்.

திருச்சி மெட்ரோ

திருச்சி மெட்ரோ சென்னைக்கு நிகராக அமையும் மெட்ரோ திருச்சி மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தை (எம்ஆர்டிஎஸ்) அறிமுகப்படுத்துவதற்காக விரிவான சாத்தியக்கூறு அறிக்கையில் (டிஎஃப்ஆர்) 45 கிமீ நீளம் கொண்ட இரண்டு காரிடர் மெட்ரோ அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஒரு காரிடர் நகரின் வடக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளை இணைக்கும், மற்றொன்று நகரின் கிழக்கு மற்றும் தெற்கு புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடுத்த 30 ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இந்த பெருந்திரள் துரிதகால போக்குவரத்து உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மாற்றம் வரலாம். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *