Trichy: Students of Government Arts and Science College are Protesting to Run More Buses

திருச்சி: கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Trichy: Students

திருச்சி மாவட்டம் (Trichy: Students) துவாக்குடி அண்ணா வளைவு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி நேரம் மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள் உரிய நேரத்திற்கு போதிய பேருந்துகள் இல்லாமல், கல்லூரிக்கு செல்லவும், கல்லூரியில் இருந்து வீட்டிற்கு செல்லவும், காலதாமதம் ஏற்படுப்படுகிறது. அதனால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுவதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Trichy-Students-collage

கல்லூரி நேரம் மாற்றம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நேரம் இதுக்கு முன்பு வரை கல்லூரி நேரம் காலை ஒரு பகுதி மாணவர்களும் மதியம் ஒரு பகுதி மாணவர்களும் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். தற்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் காலையில் மட்டும் கல்லூரி நடைபெறுவதைப் போல நேரத்தை மாற்றி அமைத்து உள்ளது.  கல்லூரி நேர மாற்றத்தினால் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கும் கல்லூரி முடிந்து செல்வதற்கும் போதிய பேருந்துகள் இல்லாமல் ஒரு சில பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி,  இந்நிலையை தவிர்க்க இந்திய மாணவர் சங்கம் தலைமையில் கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை இன்று புறக்கணித்து பிகில் அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று இருந்தனர். இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் வைரவளவன் தலைமை தாங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *