Trichy Will Soon have a Park Along the Banks of Cauvery with Modern Facilities…

திருச்சி காவிரிக்கரையோரம் நவீன வசதிகளுடன் பூங்கா விரைவில்…

Trichy

திருச்சி (Trichy ) மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓடத்துறை சாலையை ஒட்டி  பல்வேறு வசதிகளுடன்  முதல் ஆற்றங்கரைப் பூங்கா திட்டமிடப்பட்டு நவீன வசதிகளுடன் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

Trichy Park

திருச்சி மாவட்டத்தில் பொழுதுபோக்கு இடங்கள் இல்லாததால், திருச்சி மாநகராட்சி, மேலசிந்தாமணி மற்றும் ஓடத்துறை சாலை வழியாக காவிரி ஆற்றின் தென் கரையை கண்டறிந்து பூங்காவை அமைக்க திட்டமிடப்பட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னையைச் சேர்ந்த ஆலோசகர் மூலம் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கத் தொடங்கி இருக்கிறது.

கண்காணிப்பு கோபுரம்

பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக சுமார் 240 மீட்டர் நீளத்தில் ஆற்றங்கரையில் இருந்து 50 அடி அகல இடம் இந்த பூங்காவினை அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆற்றங்கரை சீரமைப்பதன் மூலம் கரையோரம் பாதுகாப்பு வேலி அமைத்து, நடைபாதை அமைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட உள்ளது. பூங்காவில் சுமார் 5 ஆயிரத்து 460 சதுர மீட்டர் நிலப்பரப்பில் ஒரு ஆம்பிதியேட்டர், குழந்தைகள் பூங்கா மற்றும் யோகா மண்டபம் ஆகியவையும் இந்த பூங்காவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தின் அடையாளமான ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், மலைக்கோட்டை மற்றும் மறுகரையில் உள்ள திருவானைக் கோயில் ஆகியவற்றை மக்கள் எளிதாக காணக்கூடிய வகையில் சுமார் 9 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரமும் இந்த பூங்காவில் அமைக்கப் படும். இந்த பூங்கா அமைக்கும் மாதிரி திட்டத்திற்கு சுமார் 14 கோடி ரூபாய் செலவாகும். ஆற்றின் அருகே மக்கள் அமர்ந்து பேசும் வகையில் கரையில் பெஞ்சுகள் அமைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *