Finance Minister Nirmala Sitharaman Inspected the Flood Affected Areas in Tamil Nadu

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் (Finance Minister) செவ்வாய்க் கிழமை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Finance-Minister

அதிகனமழை

  • தூத்துக்குடியில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுபடுத்தினார்.
  • மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக அமைச்சர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • தமிழக முதல்வர், புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்துள்ளது.
  • இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியை அவசர நிவாரண நிதியாக மக்களின் வாழ்வாதார உதவிக்காவும்,
  • தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

மத்திய குழு ஆய்வு Finance Minister

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி மாவட்டத்தில்
மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சரை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த மத்திய நிதி அமைச்சரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மழை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த நிர்மலா சீதாராமன், அங்கு வைக்கப்பட்டிருந்த மழை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார். மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினர்.

Nirmala-Sitharaman-Finance

  • ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
  • கூட்டத்துக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன்,
  • தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  • தேவையான நிவாரண உதவி குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு 72 பக்க கோரிக்கை மனுவை நிர்மலா சீத்தாராமனிடம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *