Union Finance Minister Nirmala Sitharaman: Presents Interim Budget for FY 2024-25

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்

Union Finance Minister

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கலில் நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை, 2024-25  ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் (Union Finance Minister )புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Budget Union Finance Minister

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் புதிய அறிவிப்புகள்

  • ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்ட வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • 1 கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமல்படுத்தப்படும்.
  • வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
  • பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 2 கோடி வீடுகள் அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் கட்டித்தரப்படும்.
  • அங்கன்வாடி மற்றும் ஆஷா மருத்துவ பணியாளர்களுக்கு “ஆயுஷ்மான் பாரத் திட்டம்” விரிவுபடுத்தப்படும்.
  • நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்.
  • கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம்.
  • பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.
  • பால்பண்ணை உரிமையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய திட்டம்.
  • மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்
  • தொழில்நுப்டம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்வு.
  • நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதி திட்டம்.
  • 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்காக்கள்  மீன்வளத் துறையை ஊக்குவிக்கும் வகையில், 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • மாநிலங்களுக்கு 50 ஆண்டுகால வட்டியில்லா கடன். 
  • வந்தே பாரத் ரயில்களை அதிகரிக்க முடிவு.
  • சுற்றுலா மேம்பாட்டுக்காக நீண்டகால அடிப்படையிலான கடன் உதவி வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *