Voter List Revision Work Completed! Addition of Eligible Application – Election Commission Notification

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நிறைவு! தகுதியான விண்ணப்பம் சேர்ப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Voter List

ஆண்டு தோறும் வாக்காளர்பட்டியல் (Voter List )திருத்தப் பணிகள் நடைபெறும். அப்போது, அடுத்தாண்டு ஜன. 1-ம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும்.

Election-Commission Voter List

தேர்தல் ஆணையம்

  • 17 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்க பதிவு செய்யலாம்.
  • 18 வயது நிறைவடைந்ததும் பெயர்கள் இடம் பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
  • காலாண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
  •  மக்களவை தேர்தலுக்கான வாக்காளர்பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதால், உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
  • தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஜன.22-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
  • பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்றது.
  • தேர்தலை முன்னிட்டு, கடந்த மார்ச் 17-ம்தேதி வரை பெயர் சேர்க்கலாம் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட வற்றுக்கான படிவங்களை நேரிலும், ஆன்லைன் மூலமும் வழங்கியுள்ள படிவங்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
  • மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவுறுத்தலில், மார்ச் 27-ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
  • வாக்காளர் பட்டியல் என்பது கடந்த ஜன.1-ம்தேதியை தகுதியேற்கும் நாளாக கொண்டு அமைந்திருக்க வேண்டும்.
  • 18 வயது நிரம்பியவர்கள் கடந்த ஜன.22, மார்ச் 17-ம்தேதிக்கு இடையில் விண்ணப்பித்திருந்தால் அதில் தகுதியானவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *