What are the Documents Required for Voting? – Election Commission Notification

வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன? – தேர்தல் ஆணைய அறிவிப்பு

Election Commission

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் (Election Commission) வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று  ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளிலும் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  வாக்களிப்பதற்கான ஆவணங்கள் குறித்தான தகவல்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Election Commission

ஆவணங்கள்:

மாநிலம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில் வாக்கு சாவடியில் வாக்காளர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

  • வாக்காளர் அடையாள அட்டை
  • ஆதார் அட்டை,
  • தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி அடையாள அட்டை,
  • புகைப்படத்துடன் கூடிய வங்கி
  • தபால் கணக்கு புத்தகங்கள்,
  • தொழிலாளர் நல அமைச்சக மருத்துவ காப்பீட்டு அட்டை,
  • ஓட்டுனர் உரிமம்,
  • பான்கார்டு,
  • தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ், இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,
  • பாஸ்போர்ட்,
  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,
  • மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,
  • எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை,
  • மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட, இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.

பூத் சிலிப்

தேர்தல் கமிஷன் மூலம் வழங்கப்படும் ‘பூத் சிலிப்’ அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படாது என்றும், ஒரு தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வேறொரு தொகுதியில் அடையாள அட்டையாக காண்பிக்கலாம். ஆனால் அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் தகவல் சீட்டு

வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்ள புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக நடப்பாண்டில் வாக்காளர் தகவல் சீட்டை வழங்குவதற்கு இந்திய தேர்தல் ஆணைய முடிவு செய்துள்ளது. இந்த வாக்காளர் தகவல் சீட்டில் வாக்கு சாவடியின் பெயர், வாக்குப்பதிவு நாள், நேரம் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *