WhatsApp Company Introduces Customer Friendly Colors

வாடிக்கையாளருக்கு ஏற்ற வண்ணங்களை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப் நிறுவனம்

வாட்ஸ்அப் நிறுவனம் (WhatsApp Company)

மக்கள் தங்களுடைய செய்திகளை பரிமாற்றம் செய்ய என்று SMS வசதி முன்பு அறிமுகப் படுத்தப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில்,  செய்திகளுடன், புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள கூடிய பல்வேறு நவீன வசதிகள் கொண்ட வாட்ஸ்அப்பை அறிமுகப்படுத்திய பின் மக்கள் வாட்ஸ்அப்பை (WhatsApp Company)  பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

Whatsapp

வாட்ஸ்அப்  மணிக்கணக்கில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும். தகவல்கள் பாதுகாப்பான முறையில் சென்று சேரும் உத்தரவாதமும் அளிக்கப்பட்டு உள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்கள் உபயோகத்திற்காக, மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, பல வண்ணங்களுடன் புதிய தீம்களுக்கான வசதியை விரைவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

5 வண்ணங்கள்

  • பச்சை, நீலம், வெண்மை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா ஆகிய 5 வண்ணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
  • பயனாளர்கள் அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, அவர்களுடைய செயலியில் காணப்படும் வண்ணத்தில் இருந்து தேவையான வண்ணத்திற்கு மாற்றி கொள்ளலாம்.
  • புதிய மாற்றங்களால், பின்னணி பார்ப்பதற்கு வண்ண மயத்துடன் இருக்கும்.
  • பார்வை குறைபாடு உள்ளவர்கள் அல்லது குறிப்பிட்ட வண்ணங்களை தேர்வு செய்ய விரும்புபவர்களுக்கு உதவியாக, இந்த வண்ணங்களை தேர்வு செய்யும் வசதி இருக்கும்.

கூகுள் டிரைவ் சேமிப்பு WhatsApp Company

  •  5 வண்ணங்கள் பயனாளர்களுடைய ஆளுமையை பிரதிபலிக்கும் வகையிலோ அல்லது அந்த செயலியை பார்க்க ஆவலை தூண்டும் வகையிலும் கூட இருக்கும்.
  • ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட சாட்டிங் வரலாறு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வர வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது.
  • கூகுள் டிரைவில் சேமிக்கப்படும் வாட்ஸ்அப் தரவுகள், 15 ஜி.பி. என்ற சேமிப்பு வரம்புக்குள் கொண்டு வரப்படும்.
  • பயனாளர்கள், கூகுள் ஒன் சந்தாதாரர்களாகும் வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும்.
  • ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச கூகுள் டிரைவ் சேமிப்பு வசதியை முடிவுக்கு கொண்டு வர வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *