World Investors Conference 2024: Electric Vehicle, Battery Manufacturing Plant to Start in Thoothukudi

உலக முதலீட்டாளர் மாநாடு 2024: தூத்துக்குடியில் மின்வாகன, மின்கலன் உற்பத்தி தொழிற்சாலை தொடங்க உள்ளது

World Investors Conference 2024

மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான ‘வின்ஃபாஸ்ட்’ (World Investors Conference 2024) தமிழகத்தில் தொழில் தொடங்குவதை உறுதி செய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் இவி கார் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

World Investors Conference 2024

உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான vinfast தமிழகத்தில் தொழில் தொடங்குவதை உறுதி செய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை vinfast நிறுவனம் அமைக்கவுள்ளது.

தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் இது வெறும் முதலீடு அல்ல; பெரும் பாய்ச்சல். தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் vinfast நிறுவனத்தாருக்குத் தமிழகத்தின் முதல்வராக எனது மனமார்ந்த நன்றிகள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 -இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்புரையாற்றி உள்ளார்.

அவரது முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன . தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தும் இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்தார். அந்த இலக்கை நோக்கியே, சென்னை நந்தம்பாக்கம் வர்த்த மைய வளாகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *