Xiaomi’s First Electric car “Speed ​​Ultra 7” (SU7) to Go on Sale on March 28 !!

Xiaomi-யின் முதல் எலக்ட்ரிக் கார் “ஸ்பீடு அல்ட்ரா 7” (SU7) வரும் மார்ச் 28 இல் விற்பனைக்கு !!

Xiaomi’s

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கார் எப்படி இருக்கும் என்பதற்கான (Xiaomi’s) படங்களையும் வெளியிட்ட பிரபல சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi 2021 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் அடியெடுத்து வைப்பதாக அறிவித்த நிலையில் வரும் மார்ச் 28 ஆம் தேதி சீனாவில் ஸ்பீடு அல்ட்ரா 7 (SU7) என்ற பெயரிடப்பட்டுள்ள ஜியோமி கார் விற்பனைக்கு வருகிறது.

Xiaomi's -su7

சமுக வலைதள வாசிகள் எலக்ட்ரிக் கார் Tesla மற்றும் Porche ஆகிய இரண்டு கார்களின் கலவையாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தனர்.  Xiaomi நிறுவனம் வரும் மார்ச் 28 ஆம் தேதி சீனாவில் ஸ்பீடு அல்ட்ரா 7 (SU7) என்ற பெயரிடப்பட்டுள்ள ஜியோமி கார் விற்பனைக்கு வருகிறது என்றும் இதன் விலை விவரம், விற்பனை வெளியீட்டு நிகழ்வில் தெரிய வரும் என்றும் அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

SU7 எலக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்கள்

  • 220kW ரியர் வீல் டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
  • E-motor HyperEngine V8s உள்ளதால் அதிகபட்ச மோட்டார் வேகம் 27,200 rpm
  • வலுவான 425kW வெளியீடு மற்றும் 635Nm உச்ச முறுக்கு திறன் கொண்டிருக்கும்.
  • 5.3 வினாடிகளில் காரை 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தி க்ளோபல் ரெக்காட் செய்துள்ளதாக Xiaomi தெரிவித்துள்ளது.
  • அடாப்டிவ் BEV டெக்னாலஜி, ரோட்-மேப்பிங் வசதி உள்ளது
  • SU7 ஆனது LiDAR, பதினொரு HD கேமராக்கள், மூன்று மில்லிமீட்டர் அலை ரேடார்கள் மற்றும் பன்னிரண்டு அல்ட்ராசோனிக் ரேடார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • உட்புறத்தில் 16.1-இன்ச் 3K சென்ட்ரல் கன்சோல், 7.1-இன்ச் சுழலும் டாஷ்போர்டு மற்றும் 56-இன்ச் HUD (Heads-up display) உள்ளது.
  •  பின்புற இருக்கைகளில் 2 Tablet-களை பொறுத்திக் கொள்ளலாம்.

Xiaomi’s நிறுவன சிஇஓ

ஜியோமி நிறுவன சிஇஓ லீ ஜுன் SU7 கார் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

  • எலக்ட்ரிக் கார் டெஸ்லா மற்றும் போர்ஷே ஆகிய நிறுவனங்களின் கார்களை விட அதிக ஆக்சலரேசன் வேகத்தை வழங்கும் திறன் கொண்டது.
  • U7 கார்கள் வித்யாசமாக இருக்கும். இதற்கு ஸ்மார்ட் டெக்னாலஜி தான் முக்கிய காரணம்.
  • SU7 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய 59 ஸ்டோர்களை 29 நகரங்களில் அமைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *